மணல்காட்டில் 75 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் அதிரடி கைது!
[2025-12-18 19:26:52] Views:[11]
மருதங்கேணி, மணல்காடு கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இருந்த படகொன்றில் 75 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.










