இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் சந்திப்பு!
[2025-12-18 19:09:33] Views:[12]
யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது நகராட்சி மன்றின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நகராட்சி மன்றிற்கு இந்திய உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்திய துணைத் தூதரவருடனான சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாகவும் சிநேகபூர்வமாகவும் இருந்தது என நகராட்சி மன்றத்தினர் தெரிவித்தனர்.










