yarlathirady.com

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

[2025-12-17 19:03:13] Views:[18]

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடானது இன்றையதினம் நிறைவேற்றப்பட்டது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பாதீட்டு சபை கூட்டமானது இன்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது தவிசாளர் பாதீட்டு உரையை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பாதீடு மீதான கருத்துக்களை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.

28 உறுப்பினர்களை கொண்ட சபையில் 20 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 06 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர். 02 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடானது 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.