வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பரீட்சசை தொடர்பான அறிவித்தல்.
[2025-12-17 18:48:21] Views:[13]
வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறித்த பரீட்சையை நடத்துவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்பரீட்சைக்குரிய அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைக்கு விண்ணப்பித்து இதுவரை பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் இன்றிலிருந்து எதிர்வரும் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அலுவலக நேரத்தினுள் 021 221 9939 என்ற மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரீட்சைப் பிரிவின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.










