1740 கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றிய கடற்படையினர்..!
[2025-12-14 19:31:15] Views:[16]
12ஆம் திகதி இலங்கை கடற்படையினர் கடந்த சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1740 கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்தாக 12ஆம் திகதி சிலாபம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்ட ஐம்பத்தைந்து பைகள் பரிசோதிக்கப்பட்டன.
இதன் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஆயிரத்து எழுநூற்று நாற்பது 1740 பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.










