கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயினுடன் வெளிநாட்டவர் அதிரடி கைது..!!
[2025-12-14 19:04:33] Views:[13]
நாட்டிற்குள் ஹெரோயினுடன் வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மலேசியாவிலிருந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோகிராம் 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.










