இந்திய இராணுவத்துடன் கலந்துரையாடிய யாழ். இந்தியத் துணைத்தூதுவர்..
[2025-12-11 14:51:32] Views:[13]
பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
இந் நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் இலங்கை இராணுவம், வீதி அபிவிருத்தி அதிகார சபை இணைந்து புனரமைப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
குறித்த புனரமைப்பு பணியை நேற்றைய தினம் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு இந்திய இராணுவத்தினருடன் கலந்துரையாடிருந்தனர்.










