நெடுந்தீவு கடலில் விழுந்த ஒருவர் உயிரிழப்பு!
[2025-12-10 14:49:43] Views:[11]
இன்று காலை நெடுந்தீவு-நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் வீழ்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த நபர் என கூறப்படுகிறது.
குறித்த நபர் நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார்.
அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சித்தபோதும் அவரை உயிருடன் மீட்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










