பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான செய்தி...!
[2025-12-09 21:00:40] Views:[11]
நாடளாவிய ரீதியில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 16ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளும் டிசம்பர் 16 அன்று திறக்கப்பட வேண்டும். அன்று திறக்க முடியாத பாடசாலைகளுக்கான தொடக்க நாளை நிர்ணயிக்கும் அதிகாரம் பாடசாலை அதிபர்களுக்கும் மாகாண, வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் வழங்கப்படுட்டுள்ளது.
டிசம்பர் 16 அன்று ஆரம்பிக்கும் பாடசாலைகளுக்கு வருட இறுதி விடுமுறை டிசம்பர் 23 முதல் வழங்கப்படும். டிசம்பர் 16 முதல் 22 வரையான காலப்பகுதியில் பாடசாலை சுத்தம், பராமரிப்பு, மீளமைப்பு பணிகள், வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் காணல், அவர்களுக்கு தேவையான மனநல மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை ஏற்பாடு செய்தல் போன்ற செயற்திட்டங்களை பின்பற்ற பாடசாலைகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.










