பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க விமானம்.!
[2025-12-09 20:59:07] Views:[14]
அமெரிக்காவின் நிவாரண உதவி பொருட்களுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு அமெரிக்க விமானப்படையின் விமானம் வந்தடைந்தது.
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இவ்வாறு அமெரிக்க விமானப்படையின் விமானம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட நிவாரணப்பொருட்கள் நேற்றைய தினம் இலங்கை வான் படை அதிகரிகளினால் யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனிடம் வழங்கப்பட்டது.










