யாழில் வாளுடன் ஒருவர் அதிரடி கைது..!!!
[2025-12-09 20:36:33] Views:[9]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கடந்த 07ஆம் திகதி வாளுடன், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இதன்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.










