yarlathirady.com

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பான தகவல்.

[2025-12-08 12:26:43] Views:[9]

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கப்பல் சேவை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக தொடர்பாக கப்பல் நிறுவனமானது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை சர்வதேச கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த சேவை இந்த வாரம் தொடங்க இருந்தது. ஆனால் தற்போது காலநிலை மாறுபாடுகளின் காரணமாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள புயல் தாக்கத்தால் காங்கேசன்துறைமுகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்கும் பணி நடந்து கொண்டு இருப்பதாலும் கப்பல் சேவை தொடங்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.