பற்றி எரிந்த கோவா நைட் கிளப் - 23 பேர் பலி..!
[2025-12-07 19:24:10] Views:[11]
இந்தியா, கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 சுற்றுலா பயணிகள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
வடக்கு கோவா, அர்போரா பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்ட்டுள்ளதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 3 பெண்கள் உள்பட 23 பேர் உயிரிழந்ததாக கோவா பொலிஸார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின் போது விடுதியின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாங்க கூறப்படுகிறது.










