நெடுந்தீவு கடலில் சட்டவிரோத பொருட்களை கைப்பற்றிய இலங்கை கடற்படை!
[2025-12-06 20:15:26] Views:[12]
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 160,000 வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
அதன்படி, நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 09 சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேற்படி கைப்பற்ற பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.










