yarlathirady.com

4 கிலோவுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருள் கண்டுபிடிப்பு..!

[2025-12-03 19:24:28] Views:[13]

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 4 கிலோ 260 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பேருவளை, கலங்கரை விளக்கத் தீவில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, புதர் காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 260 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 68 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.