yarlathirady.com

யாழில் இளைஞன் வெட்டிக்கொலை : ஆறு பேர் கைது...!

[2025-12-02 22:13:00] Views:[14]

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வானில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் நேற்றயதினம் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால்

இந்த நிலையில் குறித்த கொலையை புரிந்தவர்கள், ஒத்துழைத்தவர்கள், திட்டம் தீட்டியவர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 20 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் நயினாதீவு, கொக்குவில், தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஆறு பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.