yarlathirady.com

இந்திய அணி 17 ஓட்டங்களால் வெற்றி...!

[2025-12-02 15:03:27] Views:[30]

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விராட் கொஹ்லியின் அபார சதத்தின் மூலம் 17 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

கடந்த30 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணியின் சார்பில் கொஹ்லி 120 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 135 ஓட்டங்களை பெற்றார்.

இது கொஹலி ஒருநாள் போட்டிகளில் பெறும் 52 ஆவது சதமாகும். அதேபோன்று ஆரம்ப வீரர் ரோஹித் ஷர்மா (51) மற்றும் அணித் தலைவர் கே.எல். ராகுல் (60) ஆகியோர் அரைச் சதம் பெற்றனர். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் மூன்று விக்கெட்டுகளையும் 11 ஓட்டங்களுக்கு இழந்தபோதும் மத்திய வரிசை வீரர்கள் வெற்றிக்காக போராடினர். மத்தியூ பிரீட்ஸ்கே 80 பந்துகளில் 72 ஓட்கங்களை பெற்றதோடு மார்கோ ஜான்சன் 39 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசினார்.

அதேபோன்று கொபின் போஸ்ச்சும் 51 பந்துகளில் 67 ஓட்டங்களை பெற்ற நிலையில் தென்னாபிரிக்க அணி கடைசி ஓவர் வரை விட்டுக்கொடுக்காமல் ஆடினர். எனினும் விக்கெட்டுகளை காத்துக்கொள்ள தவறியதாக தென்னாபிரிக்க அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த 332 ஓட்டங்களை பெற்றது.


சினிமாசெய்திகள்
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.