yarlathirady.com

யாழில் தொற்று நோய் ஏற்படும் அபாயம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்.

[2025-11-30 12:13:59] Views:[16]

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதில், அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

மழைநீர் பல்வேறு வாழ்விடங்களில் புகுந்ததன் காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், தோல் வியாதிகள், சுவாசத் தொற்றுகள், வயிற்றோட்டம் போன்ற நோய்களும் ஏற்படலாம். ஆகவே, கீழ்வரும் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அசுத்தமான நீரில் நடைபயணம் செய்த பிறகு, அல்லது அந்த பகுதிகளில் சென்று வந்தால், சவர்க்காரம் பயன்படுத்தி கை, கால் உள்ளிட்ட உடல் பகுதிகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

சுத்தமான குடிநீரைப் பருக வேண்டும். கொதிக்க வைத்த நீரைப் பருகுவது சிறந்தது. வாழ்விடங்களை எப்போதும் தூய்மையாக பேண வேண்டும். சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உடல் நலத்தில் கவனம் செலுத்தி, நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க வேண்டியது அவசியம். வைத்திய சிகிச்சை தேவைப்படும் போது தாமதமின்றி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.  


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.