yarlathirady.com

யாழ்ப்பாண மாவட்டத்தின் அனர்த்த நிலவரம் தொடர்பான அறிவிப்பு..!

[2025-11-30 12:01:29] Views:[28]

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் நிலவர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் 8129 குடும்பங்களை சேர்ந்த 25935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுகளில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 390 அங்கத்தவர்கள் 12 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.

1580 குடும்பங்களை சேர்ந்த 4993 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 03 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் குறிக்கட்டுவானிலிருந்து சகல படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகுசேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.