yarlathirady.com

யாழ்ப்பாணத்தை பரட்டிப்போட்ட புயல்: பலியான உயிர்.

[2025-11-29 14:34:02] Views:[27]

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

நேற்று இரவின் நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை அறிக்கையிட்டுள்ளது.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததுடன் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்தது.

ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம், வரணி,மிருசுவில் மற்றும் நாவற்குழி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

தென்மராட்சி பிரதேசத்தில் 128 குடும்பங்களை சேர்ந்த 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்படவர்களில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் யாழ் பேக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மருதங்கேணியில் ஒருவர் உயிரிழந்தார். அந்தோணி பெர்னான்டோ என்ற 66 வயது மதிக்கத்தக்க முதியவரே உயிரிழந்தார்.

இதேவேளை நெடுந்தீவு மற்றும் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த இருவரும் அனர்த்தத்தில் காயமடைந்தனர்.

மேலும் நல்லூர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தோடு யாழ்ப்பாணம் புகையிர நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது. குருநகர் பகுதி வாழ் மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.