yarlathirady.com

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இரண்டு காவலர்கள் படுகாயம்..!!

[2025-11-28 13:06:16] Views:[14]

அமெரிக்காவில், வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு தேசிய காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் நகரின் மையப்பகுதியில், வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்கு விர்ஜீனியா தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இந்த வீரர்கள், உடனடியாக சிகிச்சைக்காக இரண்டு வெவ்வேறு வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, தாக்குதல் நடத்திய நபரைக் கைது செய்துள்ளனர். தாக்குதலின்போது அந்த நபரும் கடுமையாகக் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.