கடும் மழையின் கோர தாண்டவம்: 56 பேர் பலி - 21 பேர் மாயம்..!!
[2025-11-28 12:41:32] Views:[13]
கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 முதல் இன்றுவரை பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகவும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்தார்.










