yarlathirady.com

ஹாங்காங்கில் குடியிருப்பில் தீ விபத்து – 37 பேர் உயிரிழப்பு – 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை

[2025-11-27 20:14:52] Views:[30]

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நேற்று (26) காலை ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில், 37 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதே வேலை தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

ஹாங்காங் அருகே தாய் போ பகுதியிலுள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற குடியிருப்பு வளாகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகலில் இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளுக்காக கட்டிடங்கள் முழுவதும் மூங்கில் கட்டைகள் மற்றும் பச்சை வலைகள் போர்த்தப்பட்டிருந்தது. இந்த மூங்கிலில் பயன்படுத்தப்பட்ட ஸ்டைரோபோம் என்ற பொருளால் தீ வேகமாக பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.