உயர்தர பரீட்சை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது!
[2025-11-27 20:05:16] Views:[15]
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே அவர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் மற்றும் நாளைய தினம் ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.










