சீரற்ற காலநிலை: யாழில் 706 பேர் பாதிப்பு!
[2025-11-27 20:02:29] Views:[11]
யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு நேற்று மாலை4.30 மணி வரை கிடைத்த சேத விபரங்களின் நிலைவரம் இதுவாகும்.
மேலும், இதன் போது ஒரு வீடு முழுவதுமாக சேதமடைந்துள்ளதுடன், 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.










