கட்டுநாயக்கவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவை ஆரம்பிப்பது தொடர்பான தகவல்.
[2025-11-26 19:46:08] Views:[14]
கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் வடக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றை யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் நேற்று (25) நடத்தியுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட ஆளுநர், பலாலி விமான நிலையம் மற்றும் இந்தியாவுடனான கடல்வழிச் சேவைகள் விரிவடைந்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது. ஆயினும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான நீண்ட பயண நேரம் சுற்றுலாவிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே, கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கான உள்ளூர் விமான சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்திருக்கின்றோம். என வடக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.










