'சரிகமப'வில் 2வது இடத்தை வென்ற சபேசன்.!
[2025-11-24 19:19:26] Views:[14]
பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அவர், இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். சபேசனுக்கு 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவருக்கு சமூக ஊடகங்களில் அனைத்து இலங்கை மக்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










