யாழில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது..!
[2025-11-23 19:48:15] Views:[14]
யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர், 10 லீட்டர் கசிப்புடன் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றிரவு 10 லீட்டர் கசிப்புடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்மணியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










