இந்திய விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலி..!
[2025-11-22 12:25:00] Views:[16]
நேற்றையதினம் துபாயில் இந்திய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. விமான கண்காட்சி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், துபாயில் விமான கண்காட்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விபத்துக்குள்ளான குறித்த விமானமும் பங்கேற்றுள்ளது.
இதன்போது, குறித்த விமானம் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியுள்ளது. இந்தநிலையில், போர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. அத்தோடு, விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.










