இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் திடீர் மரணம்..!!
[2025-11-22 12:18:57] Views:[15]
இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் உயிரிழந்துள்ளார்.
மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாக கொண்ட இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த 58 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரது குடும்பம் இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வருகின்ற நிலையில், இவர் இடையிடையே யாழ்ப்பாணம் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி காலை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.










