yarlathirady.com

தாய் - மகன் மீது அசிட் தாக்குதல்!! பறிபோனது தாயின் உயிர்!

[2025-11-21 13:36:11] Views:[27]

இரத்தினபுரி - அயகம பகுதியில் பெண் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நடத்தப்பட்ட அசிட் தாக்குதலில் தாய் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி, கொழம்பேவ, கவரகிரிய பிரதேசத்தில் நேற்று (20) இரவு இடம்பெற்ற குறித்த சம்வத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளார்.

அசிட் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் அசிட் தாக்குதலில் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் அயகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்ததாகவும், அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி மருத்துவமனையின் பிணவறையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.