yarlathirady.com

இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில்ல் ஈடுபட்ட படகுடன் மூவர் கைது!!

[2025-11-21 13:12:16] Views:[11]

இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த படகுடன் மூவரை யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நேற்று (20) அதிகாலை யாழ்ப்பாணம், குருநகர் கடற்கரையில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து குறித்த படகு 350 கிலோகிராம் கஞ்சாவுடன் வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த படகிலுள்ள கஞ்சாவை கரையில் வைத்து கைப்பற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதற்கமைய நேற்று அதிகாலை கரைக்கு வந்த படகை கைப்பற்றிய போது அதில் கஞ்சா இருக்கவில்லை எனவும், கொண்டுவரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இடைநடுவில் கைமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த படகு இந்திய கடலில் பயணித்தமை ஜீ.பீ.எஸ் ஊடாக அவதானிக்கப்பட்ட இந்நிலையில், படகில் பயணித்த இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

மேலும், கைதானவர்களை அழைத்து செல்ல கடற்கரையில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த இளைஞர் ஒருவரையும் 130 மில்லி கிராம் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட படகு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட படகின் உரிமையாளர் ஏற்கனவே 300 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இப்போது அவரின் மருமகன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.