yarlathirady.com

வயலில் சடலமாக மீட்கப்பட்ட தவிசாளர்! பொலிஸார் தீவிர விசாரணை!

[2025-11-21 12:26:05] Views:[26]

திருகோணமலை - கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்கிக பிரகாத் தர்மதாச மர்மண முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (21) காலை வயலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

​நேற்று மாலை தனது வயலுக்கு காவல் காப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவிசாளர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை நிலையில், அவரைத் தேடி குடும்பத்தினர் இன்று காலை வயலுக்குச் சென்றுள்ளார்.

இதன் போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

​மரணத்தின் பின்னணி மற்றும் அது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​சடலமாக மீட்கப்பட்ட பிரகாத் தர்மசேன, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்டு கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளராக அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.