இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள் இந்தியாவிற்கு திரும்பினர்..!
[2025-11-20 19:01:53] Views:[17]
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 இந்திய மீனவர்கள், இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கிருந்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டில் அவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக கூறப்படுகிறது.










