பொலிஸாரின் அதிரடி: யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்..!
[2025-11-20 18:39:44] Views:[14]
விசேட அதிரடிப் படையினர் யாழ்.வடமராட்சி கிழக்கு மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் 7.5 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் சந்தேகநபரை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.










