யாழில் காற்றுடன் கூடிய கன மழை - 64 பேர் பாதிப்பு!
[2025-11-19 20:43:04] Views:[17]
கடந்த சில தினங்களாக தொடர்ந்த கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியில் சேதமடைந்துள்ளன.
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.










