கல்முனை கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்!
[2025-11-19 20:40:25] Views:[13]
அம்பாறை - கல்முனை கடற்கரை பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இன்று (19) கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டதுடன், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த மீன் சுமார் 3 முதல் 4 அடி வரையான நீளம் கொண்டதுடன், இப்பகுதியில் ஏற்பட்டுள்ள அடை மழை வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கரை ஒதுங்கி இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
இது தவிர ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.










