யாழில் பயங்கரம்! பிரான்ஸிலிருந்து வந்த குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!!
[2025-11-19 20:36:50] Views:[10]
யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று நள்ளிரவு கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் இரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் (29 வயது) என்றும், அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்.விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










