yarlathirady.com

350 மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை!

[2025-11-18 20:23:06] Views:[22]

அத்தியாவசிய சிகிச்சைகளை மக்களுக்கு மேலும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில் 350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.

ஒழுங்குபடுத்தப்பட்ட விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்வதன் மூலம் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்,

இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்படப் பல முக்கியமான மருந்துகளின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக, புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பேக்லிடேக்செல் (Paclitaxel) மருந்தின் ஒரு குப்பியின் விலை 42,000 ரூபாவிலிருந்து 26,332 ரூபாய் 29 சதமாகவும் குடற் புழுத் தொற்றுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Mebendazole 500 mg (மெபெண்டசோல்) மாத்திரையின் விலை 83 ரூபாவிலிருந்து 50 ரூபாய் 25 சதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயப் பொறிமுறை தொடரும் என்றும், புதிதாகப் பதிவுசெய்யப்படும் மருந்துகளுக்கும், உரிமம் புதுப்பிக்கப்படும் மருந்துகளுக்கும் புதிய கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், நுகர்வோர், மருந்துகள் மற்றும் அவற்றின் விலையை எளிதாக அறிந்துகொள்ள ஒரு கைபேசி செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், மருந்தகங்கள் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.