சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்:
[2025-11-17 13:29:01] Views:[15]
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தினமும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அச்சிடும் பணி நிறுதி வைக்கப்பட்டிருந்த காலங்களில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதி பத்திரங்கள் குவிந்துள்ளதாகவும், அவற்றை அச்சிடு முடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்து 14 நாட்களுக்குள் உரிமத்தை வழங்கவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.










