நயினாதீவு படகு சேவையில் நேர மாற்றம்!
[2025-11-17 13:24:04] Views:[13]
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நயினாதீவில் இருந்து இறுதி படகு சேவை மாலை 05.00 மணிக்கும், குறிகாட்டுவானில் இருந்து இறுதி படகு சேவை மாலை 05.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
அதேநேரம் வழமையான ஏனைய சேவை நேரங்களில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.










