கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
[2025-11-15 17:59:59] Views:[13]
யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். நகரை அண்டிய பகுதியில் நபர் ஒருவர் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ 750 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கு மற்றும் 50 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.










