உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்
[2025-11-10 10:55:50] Views:[14]
இன்று திங்கட்கிழமை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன 340,525 பேர் பரீட்சைக்காக இம்முறை விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இன்றை தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
94,004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் 246,521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340,525 ஆகும்.










