இலங்கையின் அணிக்கு உப தலைவராக தசுன் ஷானக்க நியமிப்பு
[2025-11-08 12:20:28] Views:[17]
க பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றுக்கான இரண்டு இலங்கை கிரிக்கெட் குழாம்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டது.
அணித் தலைவர் சரித் அசலன்க உட்பட 11 வீரர்கள் இந்த இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர்.அதேவேளை, இலங்கையின் ரி20 கிரிக்கெட் அணிக்கு முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க உப தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










