யாழ்ப்பாணம் வடமராட்சியில் சுனாமி ஒத்திகை நிகழ்வு..!
[2025-11-06 13:20:48] Views:[13]
உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.
யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல் ஆணைக்குழுவின் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியப் பயிற்சியாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக, இலங்கையின் கடலோர மாவட்டங்களான மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராம அலுவலர் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி சுனாமி ஒத்திகை பயிற்சி நேற்றயதினம் பருத்தித்துறையில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.










