yarlathirady.com

உயர்தர மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பான செய்தி.

[2025-11-05 12:43:15] Views:[15]

2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தற்போது கோரியுள்ளது.

தகுதியுள்ள மாணவர்கள் நவம்பர் முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை www.studentloans.mohe.gov.lk என்ற இணையதளம் ஊடாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரச அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் முற்றிலும் ஆங்கில வழியில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளைத் தொடர இந்த கடன் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் ஒரே அமர்வில் குறைந்தபட்சம் மூன்று சாதாரண சித்தி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் நவம்பர் முதலாம் திகதியன்று, 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் கற்கைநெறிக் கட்டணங்களுக்காக அதிகபட்சமாக ரூபா 15 இலட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படும்.

மேலும் வாழ்க்கைச் செலவுகளுக்காக ஆண்டுக்கு தலா 75,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும்.

இந்தக் கடன் வட்டியில்லாமல் வழங்கப்படும், மேலும் பட்டப்படிப்பு முடிந்த பிறகு ஒரு வருட சலுகை காலத்துடன் சேர்த்து, 12 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.

மேலதிக தகவல்களுக்கு, உயர்க்கல்வி அமைச்சின் இணையதளத்தில் பார்வையிடுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.