யாழில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரள கஞ்சா எரித்து அழிப்பு.
[2025-11-05 12:39:59] Views:[15]
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட 950 கிலோகிராம் கேரள கஞ்சா எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், யாழ்ப்பாணம் பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள், நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட எரித்து அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கோம்பயன் மணல் மயான தகன மேடையில் கஞ்சா போதைப்பொருட்கள் எரிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் மற்றும் மேலதிக நீதவான் ஆகியோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் அவை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










