வவுனியா பல்கலைக்கழக மாணவன் பகிடிவதியால் மரணம் என்று உறவினர்கள் குற்றச்சாட்டு..!!
[2025-11-03 12:21:06] Views:[15]
கடந்தாக 31ஆம் திகதி வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது அனுராதபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய வவுனியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மணவரின் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில் குறித்த மாணவன் பகிடி வதை காரமாகவே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவனது சடலம் உடட்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பூவரசன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.










