yarlathirady.com

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறந்துவைப்பு.

[2025-11-02 11:24:21] Views:[29]

உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகத்திற்கு கிராண்ட் எகிப்தியன் மியூசியம் என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த அருங்காட்சியகம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகாமையில் கிஸா பள்ளத்தாக்கில் பிரமிடுகளை பிரதிபலிக்கும் வகையில் அதே வடிவத்தில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியக வளாகம் மொத்தம் 50 ஹெக்டேர் பரப்பளவில் 2,58,000 சதுர அடியில் (70 கால்பந்து திடல் அளவு) தன்னகத்தே மூன்று பிரமிடுகளையும் ஸ்பின்க்சையும் உள்ளடக்கியதாக 50,000 இற்கும் மேற்பட்ட பழங்கால கலைநயப் பொருள்களை கட்டமைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பல்வேறு நாடுகளிலிருந்தும் எகிப்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் இந்த வளாகத்தை நவம்பர் நான்காம் திகதி முதல் ழுழுமையாகச் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.