யாழில் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது..!!
[2025-10-31 13:00:15] Views:[11]
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் நான்கு சந்தேக நபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் 2 கிராம் 540 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பாற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










